செட்டியார் தெரு நகைக்கடையில்                                 6 மில்லியன்  பெறுமதியான தங்கம் வெள்ளி திருடி                                  போதைப்பொருள் வாங்கிய சந்தேக நபர் கைது

செட்டியார் தெரு நகைக்கடையில் 6 மில்லியன் பெறுமதியான தங்கம் வெள்ளி திருடி போதைப்பொருள் வாங்கிய சந்தேக நபர் கைது

கொழும்பு புறக்கோட்டை செட்டியார் தெருவிலுள்ள , தங்கம் நகைக் கடையில் இருந்து சுமார் .6 மில்லியன் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைத் திருடிய சந்தேக நபரை புறக்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

சுமார் 70 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

60 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் குறித்த நபர் 1993 ஆம் ஆண்டு நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பொரளை சிரிசேத உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறையில், திருடப்பட்ட தங்க நகைகளில் ஒரு பவுண் எடையுள்ள சுமார் 3 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை மறைத்து வைத்திருந்தமறைந்திருந்ததாக சந்தேக நபர் வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையில் கண்டறியப்பட்டது.

சந்தேக நபர்,கடந்த மாதம் 25 ஆம் திகதி இரவு தங்க நகைக் கடையின் இரண்டு மாடி கட்டிடத்தின் கூரை வழியாக கடைக்குள் நுழைந்து திருடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருட்டு தொடர்பாக கிடைத்த முறைபாட்டைத் தொடர்ந்து, புறக்கோட்டை பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் குற்றம் நடந்த இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது தனியாக வந்த ஒருவரால் இந்த திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது.

அங்கு கிடைத்த தகவல்களின்படி, சுற்றியுள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் 5 நாட்களுக்கு மேலாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சந்தேக நபர் திருட்டை மேற்கொண்டு தங்கத்துடன் தப்பிச் சென்றமை தெரிய.வந்தது

சந்தேகநபர் தப்பிச்சென்ற முச்சக்கர வண்டியும் அடையாளம் காணப்பட்டது.

குறித்த முச்சக்கர வண்டி சாரதியிடம் விசாரித்தபோது, ​​சந்தேக நபர் மாளிகாவத்தை பகுதியில் இறங்கி சென்றது தெரியவந்தது.

திருட்டுக்குப் பிறகு சந்தேக நபர் கம்பளை, புபுரெஸ்ஸ, பன்விலதென்ன பகுதிக்குச் சென்றிருந்ததாகவும், விசேட பொலிஸ் குழு சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொடுத்து தான், ஐஸ் மற்றும் போதைப்பொருட்களை வாங்கி உட்கொண்டதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்

குறித்த நபர், ஏற்கனவே தனது சிறுநீரகங்களில் ஒன்றையும் விற்று, போதைப்பொருள் உட்கொண்டமை விசாரணைகளில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )