
உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி உறக்கத்தின் போது உயிரிழப்பு
உயிரியல் பிரிவில் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி உறக்கத்தின் போது உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளை, ஏரேவுல மேற்பிரிவைச் சேர்ந்த 19 வயதுடைய தருஷி சமோதி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவர் தம்புள்ளை தேசியப் பாடசாலையில் கல்விகற்கும் மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு தனது அறையில் படித்துக்கொண்டிருந்த மாணவி , காலையில் எழும்பாத போது பெற்றோர் .எழுப்ப முயற்சித்துள்ளனர்.
அப்போது குறித்த மாணவி தனது அறை கட்டிலில் மயக்க நிலையில் இருந்ததைக் கண்டு உடனடியாக தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
சம்பவத்தைத் தொடர்ந்து, தம்புள்ளை பொலிஸார் மாணவியின் வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும், மாணவியின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .
சம்பவம் குறித்து தம்புள்ளைபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

