
கண்டியில் உள்ள 2 மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விஜயம்
கண்டியில் உள்ள பல்லேகலே முதலீட்டு வலயத்தில் அமைந்துள்ள நாட்டின் இரண்டு பெரிய அளவிலான மருந்து உற்பத்தி நிறுவனங்களான கெலுன் லைஃப் சயின்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் செலஜென் லங்கா (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றிற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ சமீபத்தில் மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த இரண்டு நிறுவனங்களும் தற்போது கிட்டத்தட்ட 400 வகையான மருந்துகளை உற்பத்தி செய்கின்றன, மேலும் அவை ஐரோப்பிய ஒன்றிய நல்ல உற்பத்தி நடைமுறை (EU GMP) சான்றிதழைப் பெற்ற இரண்டு இலங்கை நிறுவனங்களாகும்.
கெலுன் இலங்கையில் பெரிய அளவில் உப்புநீரை உற்பத்தி செய்யும் ஒரு தனியார் நிறுவனமாகும்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கெலுன் லைஃப் சயின்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் செலஜென் லங்கா (பிரைவேட்) லிமிடெட் தொழிற்சாலைகள் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய தர முகாமைத்துவ தரநிலைகளுக்கு இணங்க மருந்து உற்பத்தி செயல்முறை மற்றும் நிறுவனங்களின் எதிர்காலத் திட்டங்களை ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில் கெலுன் மற்றும் செலஜென் நிறுவனத்தின் தலைவர் வி. நடராஜா மற்றும் நிருவாகப் பணிப்பாளர் ஐ. சத்தியமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

