
இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தலைமையில் Youth Sports Fest 2025 கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்
35வது YOUTH SPORTS FEST 2025 மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (09) கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அரங்கில், இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினந்து சமன் ஹென்னாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 4 பிரதேச செயலகப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர் மற்றும் யுவதிகள் இதில் பங்கேற்றதுடன், அதன் குழுப் போட்டி நிகழ்வுகள் அண்மையில் நிறைவடைந்தன.
மாவட்ட விளையாட்டுப் போட்டிகளின் நிறைவைக் குறிக்கும் வகையில் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டதுடன், கரச்சி பிரதேச செயலகம் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை வென்றது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு
CATEGORIES Sri Lanka

