
IPL படத்தின் டிரெய்லர் வெளியானது
பிரபல யூடியூப்பரும், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவருமான டிடிஎஃப் வாசன் தற்போது படம் ஒன்றில் நடித்து உள்ளார். அப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கு அஷ்வின் வினாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
CATEGORIES Cinema

