
வானிலை முன்னறிவிப்பு
பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் காலை வேளைகளிலும் மழை பெய்யக்கூடும்.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை வேளைகளில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CATEGORIES Sri Lanka

