
யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீயால் நேர்ந்த விபரீதம் !
யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ அருகில் உள்ள வீட்டின் மீதும் பற்றிக்கொண்டதால், அவ்வீடு பகுதியளவில் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் நேற்று (17) வீட்டு வளவுக்குள் இருந்த குப்பைக்கு தீ வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளனர்.
இந்நிலையில் குப்பையில் பற்றிய தீ, வீட்டின் கூரையில் பற்றி, பின்னர் வீடும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை அவதானித்த அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயை அணைத்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் வீட்டின் ஒரு பகுதி தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்பிதுரை பிரதீபன்

