
இந்திய பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு 9 பேர் உயிரிழப்பு , 29 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடி பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நௌகாம் (Nowgam)போலிஸ் நிலையத்தில் நேற்றிரவு வெடிப்பு சம்பவம் இடமபெற்றுள்ளது .
தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் (FSL) குழு, போலீசாருடன் இணைந்து வெடிபொருட்களை சோதனை செய்து கொண்டிருந்தபோது இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் பொலிஸ் நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், 9 பேர் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் தடயவியல் மருத்துவக் குழு அதிகாரிகள் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் புது டில்லியில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக நாட்டின் பாதுகாப்புப் படையினரால் மூன்று வைத்தியர்கள் கைது செய்யப்பட்டனர், அவர்களில் இருவர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் .
நௌகாம் பொலிஸ் நிலையத்தின் மேற்பார்வையில் அவர்கள் மீது விசாரணைகள் நடத்தப்பட்டமை .குறிப்பிடத்தக்கது.

