திருகோணமலையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் இன்று அங்கு வைக்கப்பட்டது

திருகோணமலையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் இன்று அங்கு வைக்கப்பட்டது

பாதுகாப்பின் நிமிர்த்தமாக நேற்று (16) கொண்டு செல்லப்பட்ட புத்தர் சிலை மீண்டும் இன்று (17) மதியம் அதே இடத்தில் நிறுவப்பட்டது.

திருகோணமலை கடற்கரையில் நேற்று (16) காலை,அனுமதி பெறப்படாமல் பௌத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைக்கும் முயற்சி, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் தலையீட்டை அடுத்து பொலிஸாரினால் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது. புத்தர் சிலையும் அகற்றப்பட்டது.

அந்த புத்தர் சிலை, இன்று(17) பிற்பகல் 1,30 மணியளவில் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )