
மீடியாகொடயில் நேற்றிரவு பெண்ணொருவரின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு பழிவாங்கும் செயல்
மீட் டியாகொட, கிரலகஹவெல சந்தியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 8.30 அளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உணவகத்தின் காசாளரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட மகாதுர நளினின் சகோதரியான ,மீட்டியாகொட பகுதியில் வசிக்கும் 48 வயதுடைய பெண் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது,
துப்பாக்கிச் சூட்டுக்கு பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கரந்தெனிய சுத்தாவின் மைத்துனர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து மீட்டியாகொட போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, இந்த ஆண்டு இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடுகளின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளதுடன் 54 பேர் உயிரிழந்துள்ளதுடன் 53 பேர் காயமடைந்தனர்.

