
இலங்கைக்கு வந்துள்ள ‘INS SUKANYA’ இந்திய கப்பல் நாட்டின் முக்கியஇடங்களுக்கு பயணிக்கிறது
இந்திய கடற்படையின் ‘INS SUKANYA’ போர்க்கப்பல் நேற்று முன்தினம் காலை உத்தியோகபூர்வ பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை கடற்படையினர் , கடற்படை மரபுகளுக்கமைய கப்பலை வரவேற்றனர் .
‘INS SUKANYA’ போர்க்கப்பல் சுமார் 101 மீட்டர் நீளம் கொண்டது.
கமாண்டர் சந்தோஷ் குமார் வர்மா கப்பலின் கட்டளை அதிகாரியாக செயற்படுகிறார் .
குறித்த கப்பல் நாட்டில் இருக்கும் வரை இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் இந்திய கடற்படை குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
நாட்டின் முக்கிய இடங்களைப் பார்வையிட நாட்டின் பல பகுதிகளுக்கும் கப்பல் செல்லவுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயத்தின் நிறைவு செய்து , ‘INS SUKANYA’ நாளை நாட்டை விட்டு புறப்படவுள்ளது.
CATEGORIES Sri Lanka

