
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை
யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் 56 வயதுடைய, நான்கு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் கள்ளுத்தவறணையில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தார்.
நேற்று (20) மாலை புன்னாலைக் கட்டுவனில் அமைந்துள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் கள்ளு அருந்தச் சென்ற அவர், அங்கு இருந்த இரு இளைஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலில் படுகாயமடைந்த பாதிக்கப்பட்டவர் முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை என பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

