
மஹாராகவில் முச்சக்கர வண்டியில் உடலில் காயங்களுடன் சடலம் கண்டுபிடிப்பு
மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதியின் 4காம் ஒழுங்கைக்கு அருகில் முச்சக்கர வண்டி ஒன்றில் உடலில் காயங்களுடன் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஹரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து நேற்று இரவு இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் குருநாகல், கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் உயிரிழப்பிறகான காரணம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

