மாத்தளையில் 30 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள வீட்டை கைப்பற்ற நீதிமன்ற உத்தரவு

மாத்தளையில் 30 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள வீட்டை கைப்பற்ற நீதிமன்ற உத்தரவு

மாத்தளை, கிரிமடியாவவில் 30 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள வீடொன்று பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைப்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி இந்த வீடு கட்டப்பட்டமை மாத்தளை பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது

.குறித்த வீட்டில் வசித்த இருவர் போதைப்பொருள் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

5 கிராம் 567 மில்லிகிராம் ஹெராயினுடன் 34 வயது ஆண் ஒருவரும் 46 வயது பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )