வறண்ட வானிலை ; பல பகுதிகளில் கட்டம் கட்டமாக நீர் விநியோகம் நிறுத்தம்

வறண்ட வானிலை ; பல பகுதிகளில் கட்டம் கட்டமாக நீர் விநியோகம் நிறுத்தம்

தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக, இன்று (02) முதல் 10ஆம் திகதி வரை பல பகுதிகளில் கட்டம் கட்டமாக நீர் விநியோகம் நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.

நீண்டகால நீர் விநியோகத் தடையைத் தவிர்க்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபை அறிவித்துள்ளது.

அதன்படி, பத்தரமுல்ல, பாமங்கட, வேல்வத்த மற்றும் நாவலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு நாள் இடைவெளியுடன், தினமும் இரவு 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.00 மணி வரை மூன்று மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

இதற்கிடையில், பதுக்க, ஹோமகம, பாலந்தவத்த மற்றும் பன்னிப்பிட்டிய பகுதிகளில் இரவு 8.00 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீர் விநியோகம் மீண்டும் தொடங்கிய பின்னர், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நீர் வழங்கப்படும் என்றும் சபை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அதிகாரிகள் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )