
கண்டி, கடுகண்ணாவ பகுதி கடை ஒன்றில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு பலர் காயம்
கண்டி, கடுகண்ணாவ கீழ் பிரிவில் கடை ஒன்றின் மீது இன்று காலை மண் மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த அனர்த்தத்தில் இடிபாடுகளில் சிக்கிய நான்கு பேர் மீட்கப்பட்டு மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி-கொழும்பு பிரதான வீதியின் கணேதென்ன பகுதியில் குறித்த கடை அமைந்துள்ளதால் பிரதான வீதிப் போக்குவரத்து தற்காலிகமாக ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் ஏற்பட்டபோது கடையில் இருந்த பலர் இடிபாடுகளில் சிக்கிதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேற்கொண்டது .
குறித்த கடையில் தேநீர் பருக பலரும் வருவது வழமை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

