மண்சரிவு ஏற்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதிப் பகுதி முற்றிலும் மூடப்பட்டுள்ளது

மண்சரிவு ஏற்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதிப் பகுதி முற்றிலும் மூடப்பட்டுள்ளது

கண்டி கடுகண்ணாவ கீழ் பிரிவு கணேதென்ன பகுதியில் இன்று காலை கடை ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதால், மண்சரிவு ஏற்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதிப் பகுதி மூடப்பட்டுள்ளது

இதன் விளைவாக, அந்தப் பகுதி வழியாகச் செல்லும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு மாவனெல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் நான்கு பேர் காயங்களுடன் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடையில் இருந்த பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அர்த்தத்திற்குள்ளான கடையும் அதை ஒட்டி அமைத்திருந்த வீடும் ஹிங்குல பிரதேசத்திற்கு அருகில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதி செங்குத்தான சரிவில் அமைந்துள்ளதுடன் கடையின் பின்னால் இருந்த ஒரு மண் மேடு இடிந்து விழுந்துள்ளது.

இடிபாடுகளுக்கு அடியில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பதை உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், பலர் காயமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது

குறித்த கடையில் பலர் தேநீர் அருந்த வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )