
10 000 ml சட்டவிரோத மதுபானத்துடன் யாழில் பெண் கைது
10 ஆயிரம் மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 42 வயதுடைய பெண் ஒருவர் நேற்றிரவு ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்றிரவு 10000 மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
CATEGORIES Sri Lanka

