அடுத்த 48 மணி நேரத்திற்குள் சூறாவளி புயல் உருவாகும் வாய்ப்புமறு அறிவிப்பு வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

அடுத்த 48 மணி நேரத்திற்குள் சூறாவளி புயல் உருவாகும் வாய்ப்புமறு அறிவிப்பு வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்கள பேரிடர் முன்னெச்சரிக்கை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் இயங்கும் பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் இயங்கும் மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும் அது மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நாளை (24) க்குள் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளது.

இந்த அமைப்பு அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு சூறாவளி புயலாக மேலும் உருவாக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் காற்றின் வேகம் சில நேரங்களில் (55-65) கிமீ வேகத்தில் அதிகரிக்கும் போது அந்த கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ மாறும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தக் கடல் பகுதிகளில் மீன்பிடித்தல் மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகள் மறு அறிவிப்பு வரும் வரை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தற்போது நீங்கள் அந்தப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், அந்தக் கடல் பகுதிகளை விட்டு வெளியேறவும் அறிவுறுத்தப்படுகிறது.

மீன்பிடி மற்றும் கடல் சமூகங்கள் இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் முன்னறிவிப்புகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நவம்பர் 25 ஆம் திகதி வரை இலங்கைக்கு அப்பால் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என நாட்டைச் சுற்றியுள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் கடல் சமூகங்கள், அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாட்டைச் சுற்றியுள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் கடல் சமூகங்கள், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் முன்னறிவிப்புகள் மற்றும் ஆலோசனைகளுக்கு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )