
இன்றும் நாளையும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறமாட்டாது
இன்று மற்றும் நாளை உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு, நாடு முழுவதும் நிலவும் பாதகமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
பரீட்சை நடைபெறும் திகதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படுமென கூறப்பட்டுள்ளது.
பரீட்சை மையங்களில் வினாத்தாள்களின் பாதுகாப்பு தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அனைத்து மாகாண கல்வி இயக்குநர்கள், வலயக் கல்வி இயக்குநர்கள், பிராந்திய அதிகாரிகள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

