சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுகான நிவாரணம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுகான நிவாரணம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தலைமையிலான அவசர கூட்டமொன்று தற்போது இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், நிலைமையை சீர்செய்வதற்காக முன்னேற்பாடுகள்,
மற்றும் அவசர நிலைமைகளில் பொலிஸாரின் செயற்பாடு தொடர்பிலும் கலந்துரையாடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற்றுள்ளனர் .

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இன்று பிற்பகலுக்குள் கண்டி மற்றும் நுவரெலியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )