கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை அறிவிப்புஇந்து சமுத்திர பகுதியில் நிலநடுக்கம்

கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை அறிவிப்புஇந்து சமுத்திர பகுதியில் நிலநடுக்கம்

நாட்டைச் சூழவு ள்ள கரையோரப் பகுதிகளிலும் அதனை அண்மித்த பகுதிகளும் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளி மண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது

இன்று காலை 10 26ற்கு இந்து சமுத்திரத்தில் 6.6 மக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது

இந்து சமுத்திரப் பகுதியில் ,( 2.68 அகலாங்கு மற்றும் 96.07 நெட்டாங்குகளுக்கிடையில்) 25 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இலங்கையின் கரையோரத்தில் வாழும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

எவ்வாறாயினும் சுனாமி ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )