
பாதுகாப்பான பகுதிக்கு உடனடியாக செல்லுங்கள் 7 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு சிவப்பு அறிவிப்பு
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் 7 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு குறித்து சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது,
அங்குள்ள பொதுமக்களை உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவித்துள்ளது.
இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும்.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் 7 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை மற்றும் அபாய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு நிலச்சரிவு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
CATEGORIES Sri Lanka

