ஐந்து மீனவர்கள் மாயம் – மீனவர்களை மீட்க கடற்படை கப்பல் அனுப்பப்பட்டது

ஐந்து மீனவர்கள் மாயம் – மீனவர்களை மீட்க கடற்படை கப்பல் அனுப்பப்பட்டது

ரத்கமவெல்ல துறைமுகத்திலிருந்து இன்று காலை இரு தனித்தனி படகுகளில் புறப்பட்ட ஐந்து மீனவர்கள் கடலில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் இன்று அதிகாலையில் கடலுக்குச் சென்று திரும்பி வரவில்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காணாமல் போயுள்ள மீனவர்களை தேடுவதற்கான மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு இலங்கை கடற்படை கப்பலொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )