
சீரற்ற காலநிலையால் உயிரிழப்புக்கள் 56 ஆக அதிகரிப்பு 20 மாவட்டங்களில் 43, 991 பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
உயிரிழப்புகள் இடம்பெற்ற பகுதிகள்
பதுளை – 21
கண்டி – 15
கேகாலை – 7
அம்பாறை – 5
நுவரெலியா – 4
அநுராதபுரம் – 1
குருநாகல் – 1
ஹம்பாந்தோட்டை – 1
காலி – 1
20 மாவட்டங்களைச் சேர்ந்த 43, 991 பேர் பதிப்படைந்துள்ளனர். 14 பேர் காயங்களுக்குள்ளகியுள்ளதுடன் 21 பேரை காணவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
666 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

