வெளிநாட்டு உதவியை நிர்வகிக்கவும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் உதவிகளை உறவினர்களுடன் தொடர்புபடுத்தும் வகையிலும் அவசர ஒருங்கிணைப்பு பிரிவு

வெளிநாட்டு உதவியை நிர்வகிக்கவும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் உதவிகளை உறவினர்களுடன் தொடர்புபடுத்தும் வகையிலும் அவசர ஒருங்கிணைப்பு பிரிவு

தற்போதைய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கான நிவாரண சேவைகளை நிர்வகிக்கவும் நெறிப்படுத்தவும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைதொடர்புபடுத்தும் வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு கூட்டாக ஒரு அவசர ஒருங்கிணைப்பு பிரிவை நிறுவியுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள், இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் உதவிகளை ஒருங்கிணைக்கப்பதற்காக இந்த அவசர ஒருங்கிணைப்பு பிரிவு ஒரு மையமாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் நலனுக்காக இந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும், இந்த செயல்பாட்டின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படும் என்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.

உதவியை நிர்வகிப்பதோடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அனர்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தங்கள் உறவினர்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு மையமாகவும் இந்த பிரிவு செயல்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சர்வதேச உதவி மற்றும் வெளிநாடுகளில் உள்ள நன்கொடையாளர்களிடமிருந்து உதவி தேவைப்படுபவர்களுக்கு விரைவாகவும் திறமையாகவும் உதவிகளை வழங்குவதை எளிதாக்கும்.

அனர்த்த நிலைமைகளுக்கு விரிவான மற்றும் பயனுள்ள தீர்வை உறுதி செய்வதற்காக, அவசரகால ஒருங்கிணைப்பு பிரிவு ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இந்த அமைப்பு செயல்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )