
டித்வா புயல் ; உயிரிழப்புகள் 355 ஆக உயர்வு
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று காலை 9.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேபோல், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 366 பேர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களைத் தேடும் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை மற்றும் டித்வா புயலால் நாடு முழுவதும் 318,252 குடும்பங்களைச் சேர்ந்த 1,156,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக உயிரிழப்புகள்
- கண்டி மாவட்டம் – 88
- நுவரெலியா மாவட்டம் – 75
- பதுளை மாவட்டம் – 71
- குருநாகல் மாவட்டம் – 37
- மாத்தளை மாவட்டம் – 23
காணாமல் போனோர் எண்ணிக்கை
- கண்டி – 150
- நுவரெலியா – 62
- பதுளை – 53
- கேகாலை – 46
- குருநாகல் – 35
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வழங்கியுள்ள தகவலின்படி, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதுடன், சேத மதிப்பீட்டு பணிகளும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

