
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கண்டி நீதிமன்றங்களுக்கு அனைத்து வசதிகளையும் உடனடியாக வழங்குவது குறித்த விசேட கலந்துரையாடல்
தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களின்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வழக்குப் பதிவுகளை உடனடியாக மீட்டெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
துப்புரவுப் பணிகளுக்காக இரண்டு மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணியமர்த்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
திடீர் அனர்த்தத்தால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கண்டி நீதிமன்றங்களுக்கு அனைத்து வசதிகளையும் உடனடியாக வழங்குவது குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (08) காலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், வழக்கறிஞர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் கண்டி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
வெள்ள நிலைமை காரணமாக நீதிமன்றத்தில் மின்சாரம் தழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதால், பிரதான மின் பலகையை மீள சரிசெய்யும் வரை இரண்டு நாட்களுக்கு தற்காலிக மின்சாரம் வழங்குதல், நீதிமன்றத்தின் கீழ் தளத்தில் உள்ள அனைத்து ஆவணக் காப்பகங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களின்படி வெள்ளத்தில் சிக்கிய வழக்குப் பதிவுகளை உடனடியாக மீட்டெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், கீழ் தளத்தில் ஆவணக் காப்பகம் மற்றும் மேல் தளத்தில் நீதிமன்ற நூலகம் அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
நீதிமன்ற வளாகத்தை சுத்தம் செய்வதற்கு போதுமான ஊழியர்கள் இல்லாததால், இரண்டு மாத காலத்திற்கு அவசர துப்புரவு சேவைக்காக ஐம்பது ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவமற்கும், மேலும் வெள்ளத்தால் சேதமடைந்த அலுவலக உபகரணங்கள் மற்றும் கணனிகளை அவசர கொள்முதல் அடிப்படையில் வாங்குவது மற்றும் பேரழிவுகள் காரணமாக வழங்கப்பட்ட வெளிநாட்டு உதவிகளிலிருந்து அத்தகைய உபகரணங்களைப் பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நீதிமன்ற வளாகத்தை சுத்தம் செய்வதற்கான தன்னார்வ குழுக்களின் உதவி குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அவசரகால சூழ்நிலை காரணமாக சேதமடைந்த கண்டி நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்ற நூலகத்தை நீதி அமைச்சர் ஆய்வு செய்தார்.
கண்டி உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க, கண்டி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் வீரரத்ன, வழக்கறிஞர்கள் மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருப்பாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகளு இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

