
டித்வா புயல் ; பலி எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டின் 25 மாவட்டங்களையும் தாக்கியுள்ள அனர்த்தகரமான காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 639 ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று (09) மாலை 6.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிக்கையில் மேலும், 203 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 529,741 குடும்பங்களைச் சேர்ந்த 1,824,771 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் சேதங்கள் பதிவாகியுள்ள நிலையில், கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமான 234 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அனர்த்தத்தால் வீடுகள் சேதமடைந்ததால், 27,145 குடும்பங்களைச் சேர்ந்த 86,040 நபர்கள் இன்னும் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர் என்று அறிக்கை தெரிவிக்கின்றது.

