கெஹெல்பத்தர பத்மே குற்றக் குழுவுடன் தொடர்புடைய இருவர் கைது

கெஹெல்பத்தர பத்மே குற்றக் குழுவுடன் தொடர்புடைய இருவர் கைது

இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பின்னர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் பத்மசிறி பெரேராவுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அவரது வழிகாட்டுதலின் பேரில் குற்றச் செயல்களை மேற்கொள்ள பண ஒப்பந்தங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் உட்பட இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர்.

CID அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பு 10இல் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீகொடை மற்றும் எம்பிலிப்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 32 மற்றும் 25 வயதுடையோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து 15 தோட்டாக்கள் மற்றும் ரூ. 1,534,000 பணமும் CID அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )