அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கத்திற்கு வழங்கிய கலாநிதி.வி.ஜனகன்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கத்திற்கு வழங்கிய கலாநிதி.வி.ஜனகன்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் , ஜனனம் அறக்கட்டளையின் தலைவரும், IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளருமான கலாநிதி.வி.ஜனகன் 2 மில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்.

கொழும்பு ஹுணுப்பிட்டிய கங்காராம விகாரையில் நேற்று (11) நடைபெற்ற பிரித் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இந்த நிதி கையளிக்கப்பட்டது .

தித்வா சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கால் அனர்த்தத்திற்கு உள்ளானவர்களுக்கு நல்லாசி வேண்டியும் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டிம் , புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற பூஜை வழிபாடுகளின் பின்னர் IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி.வி.ஜனகனின் தாயார் 2 மில்லியன் நன்கொடைக்கான காசோலையை பிதமரிடம் கையளித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )