தகவல் தொழில்நுட்ப பரீட்சை 2026 ஜனவரி 11 நடைபெறும்

தகவல் தொழில்நுட்ப பரீட்சை 2026 ஜனவரி 11 நடைபெறும்

ஒத்திவைக்கப்பட்ட 2025 பொது தகவல் தொழில்நுட்பத் பரீட்சையை (GIT) ஜனவரி 11, 2026 அன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த பரீட்சார்த்திகள் தங்கள் பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுத வர முடியாவிட்டால், அவர்கள் தங்கள் பாடசாலையின் அதிபருக்குத் தெரிவிக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சம்பந்தப்பட்ட அதிபர்கள் தங்கள் பாடசாலையில் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் குறித்து கழிவமைச்சிற்கு அறிவிக்கவேண்டும் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )