உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் திடீர் வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் திடீர் வீழ்ச்சி

2026 ஜனவரி மாத இறுதியில், உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று 31ஆம் திகதி நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,893.2 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது,

இது நேற்றுடன் ஒப்பிடும்போது 434.45 அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளதுடன் இந்த வீழ்ச்சி 8.15% சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை உலக சந்தையில் வெள்ளி விலையும் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 85.34 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதுடன், இது நேற்றுடன் ஒப்பிடும்போது 29.16 அமெரிக்க டொலர்கள்வீழ்ச்சி எனவும் 25.46% சதவீத வீழ்ச்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி சந்தைகளில் இருந்து சுமார் 15 டிரில்லியன் டொலர்கள் பணமாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச வர்த்தக செய்தி அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இருப்பினும், தங்கத்தின் விலை பொதுவாக 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )