தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்பைனி லாப்ஸ்டர்களைப் பிடித்து வெளிநாட்டினருக்கு விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர் பேருவளையில் கைது

தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்பைனி லாப்ஸ்டர்களைப் பிடித்து வெளிநாட்டினருக்கு விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர் பேருவளையில் கைது

அதிக விலைக்கு வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்காக, ஸ்பைனி லாப்ஸ்டர்களைப் பிடித்து சேமித்து வைக்கப்பட்ட இடம் ஒன்று பேருவளை பிரதேசத்தின் மருதானை மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள, களுத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இடம் சோதனைக்குற்படுத்தப்பட்டது.

பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள சிறிய ஸ்பைனி லாப்ஸ்டர்கள் மற்றும் முட்டையிடும் ஸ்பைனி லாப்ஸ்டர்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட குறித்த பகுதியில் வசிக்கும் ஒரு மீனவர் கைது செய்யப்பட்டு, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வகையான தடைவிதிக்கப்பட்டுள்ள சிறிய ஸ்பைனி லாப்ஸ்டர்களையும் முட்டையிடும் ஸ்பைனி லாப்ஸ்டர்களையும் பிடிக்கும் போது , ​​கடலில் உள்ள லாப்ஸ்டர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள் கூறுகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )