
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புதிய அம்சம்
சமூக வலைத்தளங்களில் பயனர்கள் இடையே அதிகம் பயன்படுத்தும் செயலியாக இன்ஸ்டாகிராம் உள்ளது.
உலகம் முழுவதும் 3 பில்லியன் பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துகிறார்கள்.
அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இன்ஸ்டாவில் பப்ளிக் அக்கவுண்டில் பகிரப்படும் ஸ்டோரீஸ்களை பயனர்கள் தங்கள் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த பதிவு மூலம் ஒருவர் உங்களை டேக் செய்யாவிட்டாலும் அந்த ஸ்டோரீஸ்களை பயனர்கள் பகிர முடியும்.
பிரபலங்களின் ஸ்டோரீஸ்களை இதன் மூலம், பயனர்கள் தங்கள் பக்கத்தில் பகிர முடியும் என்பதால் இன்ஸ்டா பயனர்கள் இந்த வசதியால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

