
கொம்புசீவி படத்தின் டிரெய்லர் வெளியானது
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘கொம்புசீவி’.
இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ‘கொம்புசீவி’ படம் கிறிஸ்துமஸுக்கு முன்னதாக வருகிற 19-ந்திகதி வெளியாகும் என டிரெய்லரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
CATEGORIES Cinema

