மலையக மக்களுக்கு பாதுகாப்பான வதிவிட காணிகளை பெற்றுக்கொடுக்க மலையக பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட தயார் -மனோ கணேசன்

மலையக மக்களுக்கு பாதுகாப்பான வதிவிட காணிகளை பெற்றுக்கொடுக்க மலையக பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட தயார் -மனோ கணேசன்

அனர்த்ததால் மலையகத்தில் பாதிக்கப்பட்டார்களுக்கு “பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமை கோரிக்கையை அரசுடன் உரையாடி பெற அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக பிரதிநிதிகளுடன் கலந்து பேசி இணைந்து செயற்பட தயார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மலையக சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழும் பிரிவினரின் பரிதாப சமூக பிரச்சினையை, மனதில் கொண்டு, அவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பாதுகாப்பான வதிவிட காணிகளை அரசிடம் கோரி பெறுவோம் என தெரிவிக்கும் வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மனோ எம்பி கூறியுள்ளார் .

பெரும்பாலான மலை பகுதிகளிலும் மலை பாறைகள், மலை மேடுகள், தரை நிலங்கள் வெடித்து உள்ளன. இடைவெளிகளில் நீர் வெளியேறுகின்றன.

இது இயற்கை அனர்த்தம் என சிலர் கூறுவதை போன்று இவற்றை கொங்ரீட் போட்டு ஓட்ட முடியாது. இவை இயற்கை நில வெடிப்பு. இதற்கு முன் நடைபெற்ற அவலங்களை விட இம்முறை அவலம் அவதானத்துக்கு உரியது என தான் நம்புவதாக மனோகணேஷன் mp கூறினார்.

இது தொடர்பில் ஜனாதிபதி தோழர் அனுரா குமார திசாநாயக்கவுடன் தான் கடந்த வாரம் நேரடியாக நாடாளுமன்றத்தில் உரையாடிதாகவும் வரவுசெலவு திட்டத்தின் இறுதி நாளன்று எதிர்கட்சிகளுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்யாமல், ஜனாதிபதியின் உரையை தான் செவிமடுத்ததாகவும் , இனிமேல் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களிலேயே குடியமர்த்த-படுவார்கள் என அவர் சபையில் தன் உரையில் கூறியதை நேரடியாக பாராட்டி, அதே சந்தர்ப்பம் மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என தான் வலியுறுத்திதாகவும் மனோ கணேஷன் mp அறிக்கையில் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )