வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது

சுமார் 55 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பயணி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (31) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவையின் EK-654 விமானம் மூலம் அதிகாலை 12.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவரது பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35,000 வெளிநாட்டு சிகரெட்டுகள், 2,000 நிகோடின் பாக்கெட்டுகள் மற்றும் 50 மின்னணு சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 5.5 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )