சுகாதார அமைச்சருக்கும் உலக சுகாதார அமைப்பின் நாட்டுப் பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

சுகாதார அமைச்சருக்கும் உலக சுகாதார அமைப்பின் நாட்டுப் பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

சுகாதார அமைச்சின் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சகல கோரிக்கைகளுக்கும் தேவையான முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக, உலக சுகாதார அமைப்பின் (WHO) இலங்கைக்கான நாட்டுப் பிரதிநிதி டாக்டர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்த சந்திப்பு அண்மையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில், நாட்டின் சுகாதாரத் துறையை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பாக விரிவாக பேசப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )