
போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் சிலரின் கருத்துக்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதுவரிடம் வருத்தம் தெரிவித்த ஈபிடிபி
கடந்த 12 ஆம் திகதி கடற்றொழிலாளர்களினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் சிலர், இந்திய துணைத் தூதராலயம் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளியிடம் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தனது மன வருத்தத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
இதன்போது சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் தித்தவா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு இந்தியா வழங்கி வருகின்ற பங்களிப்புக்களுக்கு தமது நன்றிகளையும் ஈழ மக்கள்தித்தவா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு இந்தியா வழங்கி வருகின்ற பங்களிப்புக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தெரிவித்தது.
யாழ். இந்திய துணைத் தூதராலயத்தில் நேற்று (15) இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், இந்தியத் துணைத் தூதராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கு தமது கட்சி கரிசனையுடன் அக்காலப் பகுதியில் செயற்பட்டமையை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி நினைவு கூர்ந்தது .
50,000 வீட்டுத் திட்டம், யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, பனை அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையம், வடக்கிற்கான ரயில் பாதைகள், உட்கட்டமைப்பு திட்டங்கள் உற்பட இந்தியாவின் இலங்கைக்கான பல்வேறு வாழ்வாதாரத் திட்டங்களை இந்திய துணைத்தூதரிடம் ஈபிடிபியினர் சுட்டிக்காட்டியதுடன், அனைத்து திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதில் யாழ். துணைத் தூதரலாயத்தின் பங்கினையும் நினைவுபடுத்தினர்.
இவ்வாறான பின்னணியில், எமது வளங்களை அழிக்கின்ற இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிராக கடற்றொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட நியாயமான போராட்டத்தினுள் நுழைந்த சிலர், இந்தியத் துணைத் தூதராலயத்தினை மூடுவது தொடர்பாக வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் ஈ.பி.டி.பி. தரப்பினரால் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

