நீரில் மூழ்கி வெளிநாட்டவர் பலி

நீரில் மூழ்கி வெளிநாட்டவர் பலி

ஹிக்கடுவ, வேவல கடற்கரையில் நேற்று (20) கடலில் நீந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் தெரிவிப்பதாவது, குறித்த நபர் கடலில் நீந்திக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட வலுவான நீரோட்டத்தில் சிக்கி தண்ணீரில் இழுக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் கரைக்கு கொண்டு வரப்பட்டு பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், வழங்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )