ஆசியாவின் மிகப்பெரிய தங்க படிமத்தை கண்டுபிடித்த சீனா

ஆசியாவின் மிகப்பெரிய தங்க படிமத்தை கண்டுபிடித்த சீனா

உலகின் மதிப்புமிக்க உலோகங்களில் ஒன்றாக தங்கம் கருதப்படுகிறது. அதன் விலை வேகமாக உயர்ந்துவரும் நிலையிலும், மக்களிடையே தங்கத்தின் மீதான ஈர்ப்பு குறையவில்லை.

தங்க உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடாக சீனா திகழ்கிறது. அதேவேளை, தங்க கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளில் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து சீனா மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், புதிய தங்கப் படிமங்களை கண்டறியும் முயற்சிகளை சீனா தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஷான்டாங் மாகாணத்தின் லைஜோ நகரில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய தங்கப் படிமத்தை சீனா கண்டறிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படிமத்தில் சுமார் 39 இலட்சம் கிலோ தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது சீனாவின் மொத்த தங்க கையிருப்பில் சுமார் 26 சதவீதம் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம், லைஜோ பகுதி சீனாவின் தங்க கையிருப்பு மற்றும் உற்பத்தியில் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு, சீனாவின் தங்க உற்பத்தித் துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )