திபெத்தில் நிலநடுக்கம்

திபெத்தில் நிலநடுக்கம்

சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமான திபெத், இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான பகுதியில் அமைந்துள்ளது.

கடந்த ஜனவரி 7ஆம் திகதி திபெத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், ஷிகாட்சே நகரை மையமாகக் கொண்டு பதிவாகி, அதில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், திபெத்தில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அதன் மையப்புள்ளி 28.51 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 87.57 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது பாதிப்புகள் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )