டித்வா புயல் சேதங்களுக்கு இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் மீள் கட்டமைப்பு உதவி – இந்தியா

டித்வா புயல் சேதங்களுக்கு இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் மீள் கட்டமைப்பு உதவி – இந்தியா

டித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட சேதங்களை மீளக் கட்டமைப்பதற்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவித் திட்டமொன்றை இந்தியா அறிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார்.

அந்த உதவித் தொகையில், 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகை அடிப்படையிலான கடன் திட்டமாகவும், 100 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையாகவும் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த உதவி, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள் கட்டமைப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மீளச் சீரமைப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )