அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, குறித்த சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காலி குற்றத்தடுப்புப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ரிவோல்வர் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 22 ஆம் திகதி அம்பலாங்கொடை நகரில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் மீது,மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் வர்த்த நிலைய மேலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது..

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் குற்றக் கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர் என கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )