
சீதுவ களியாட்ட விடுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் முயற்சி 6 பேர் கைது
கம்பஹா, சீதுவ பகுதியில் உள்ள களியாட்ட விடுதியொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக கூறப்படும் ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் விடுதியின் முகாமையாளர், தொழிலதிபர் ஒருவர் மற்றும் முச்சக்கர ஓட்டுநர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கைதான விடுதி முகாமையாளருக்கு எதிராக ஏற்கனவே நீர்கொழும்பு நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதன்போது ஆறு பெற்றோல் குண்டுகளும்
கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

