
இம்முறை கிறிஸ்மஸ் தினத்தில் பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுவிக்கப்படவில்லை
வரலாற்றில் முதல் முறையாக, இந்த வருடம் கிறிஸ்மஸ் தினத்திற்கு பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுவிக்கப்படவில்லையென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடுவிக்கப்பட வேண்டிய கைதிகளின் பட்டியல் சம்பந்தப்பட்ட அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன் கைதிகள் தொடர்பில் பல அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்காலத்தில் கிறிஸ்மஸ் தினத்திற்கு சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
CATEGORIES Sri Lanka

