களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி மீது இன்று காலை துப்பாக்கிச் சூட்டில் கைதி காயம்

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி மீது இன்று காலை துப்பாக்கிச் சூட்டில் கைதி காயம்

களுத்துறை ,நாகொட போதனா வைத்தியசாலையின் 14ஆம் இலக்க வார்டில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி ஒருவரை குறிவைத்து இன்று (31) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த கைதி காயமடைந்தார்.

இன்று காலை 6.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் , அறுவை சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதியின் வயிற்றில் துப்பாக்கிச் சூடுமேற்கொள்ளப்பட்ட தாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கைதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )