
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 885 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) முன்னெடுக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய செயற்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது, 885 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, மொத்தமாக 888 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பின் போது,
767 கிராம் ஹெரோயின், 527 கிராம் ஐஸ், 01 கிலோ 056 கிராம் கொக்கெயின், 25 கிலோ 808 கிராம் கஞ்சா, 16,591 கஞ்சா செடிகள், 066 கிராம் ஹஷீஸ், 1,210 போதை மாத்திரைகள், 101 கிராம் 320 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகள் மற்றும் 060 கிராம் மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களில் 18 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

