
தரம் 6 ஆங்கில பாடத் தொகுதி சர்ச்சையால் தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் நாயகம் தற்காலிகமாக பதவி விலக தீர்மானம்
தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக பதவி விலகத் தீர்மானித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாடத் தொகுதி (module) தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை அவர் தமது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைய தயாரிக்கப்பட்டு பாடசாலைகளுக்காக விநியோகிக்கப்பட்ட 6 ஆம் தரத்திற்கான பாடத் தொகுதியில் பொருத்தமற்ற இணையத்தளம் ஒன்றின் பெயர் ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் எழுந்த சர்ச்சைகளையடுத்து பாட தொகுதி பரிசோதிக்கப்பட்டது.
அவ்வாறு உள்ளடக்கப்பட்டமையை கல்வி அமைச்சும் உறுதிப்படுத்தியது ,
இது தொடர்பில் விசாரணையினை நடத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ குற்றப்புலனாய்வவு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றையும் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

